பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலை. உறுப்​புக் கல்​லூரி​கள் மற்​றும் மண்டல வளாகங்​கள் தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஜெய்​சன், ராஜ்கு​மார், கோசலை ஆகியோர், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்​கலை.யின் 13 உறுப்​புக் ​கல்லூரி​கள் மற்​றும் 3 மண்டல வளாகங்​களில் 328 தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் 10,15 ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலை​யில் அதன்​பிறகு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இதனால், நாங்​களும் எங்​கள் குடும்​பத்​தினரும் நிராதர​வாக நிற்​கிறோம். எங்​களில் பெரும்​பாலானோர் பிஎச்டி பட்​டம் பெற்​றவர்​கள்.

மாணவர்களின் கல்வி பாதிப்பு

பணி​வாய்ப்பு இல்லை என்று பல்​கலைக்​கழக நிர்​வாகம் காரணம் சொல்​கிறது.ஆனால், ஏஐசிடிஇ விதி​முறைப்​படி,தற்​போது படித்து வரும் 22,230 மாணவர்​களுக்கு 1,112 உதவி பேராசிரியர்​கள் தேவை. ஆனால், வெறும் 667 நிரந்தர ஆசிரியர்​களே தற்​போது உள்​ளனர்.

எங்​களை நீக்​கி​விட்​ட​தால் மாணவர்​கள் குறிப்​பாக கிராமப்​புற மாணவர்​களின் கல்வி கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. எங்​களுக்கு தொடர்ந்து பணிநீட்​டிப்பு வழங்க வேண்​டும் என்று கோரி பிப்​ர​வரி​யில் 2 கட்​டங்​களாக தொடர் போராட்​டங்​கள் நடத்​தினோம்.

ஆனால், எங்​களின் கோரிக்​கையை தமிழக முதல்​வரின் கவனத்​துக்கு உயர்​கல்​வித் துறை அதி​காரி​கள் கொண்​டு​ போக​வில்​லை. எனவே எங்​களது கோரிக்கையை உடனடியாக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in