சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்
Updated on
1 min read

சென்னை: கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யில் அரசு மருத்துவர்கள் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன் படி, மருத்​து​வர்​களுக்கு உரிய கால​முறை ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்​வு​களை வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்து வந்​தனர்.

தீர்வு கிடைக்​காத நிலை​யில், சென்னை மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை வளாகத்​தில் அரசு மருத்துவர்கள் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டத்தை நேற்று தொடங்​கினர்.

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் மாநில ஒருங் கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன், ராமலிங்​கம், அகிலன் ஆகியோர் தலை​மை​யில் உண்​ணா​விர போராட்​டம் நடை​பெற்​றது.

இது தொடர்​பாக, மருத்​து​வர் அகிலன் கூறும்​போது, ‘அரசின் இறுதி முடிவு வரும் வரை, நோயாளி​களுக்கு எவ்​வித இடையூறும் இன்றி மருத்​து​வ​மனை வளாகத்​திலேயே கால​வரையற்ற உண்​ணா​விரத போராட்​டத்தை தொடரத் தீர்​மானித்​தோம்.

இருப்​பினும், மருத்​து​வ​மனை வளாகத்​தில் போராட்​டம் நடத்​தக் கூடாது என்று காவல்​துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. எனவே, தற்​காலிக​மாக எங்​களது போராட்​டத்தை தள்​ளி வைக்​கிறோம்.

விரை​வில் காவல் ​துறை​யிடம் உரிய அனு​மதி பெற்று போ​ராட்​டத்​தைத்​ தொடங்​கு​வோம்​” என்​றார்​.

சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்
வேளச்சேரி - பரங்கிமலை தடத்தில் பாதுகாப்பு ஆணையர் நடத்திய அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in