

சென்னை: புதுச்சேரி திமுகவில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் குறித்து தங்கம் தென்னரசு தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளை நவ.10-ம் தேதிக்குள் வழங்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பவளவிழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் திமுக புத்தெழுச்சியைப் பெற அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடையை, கட்சித் தலைவர் ஸ்டாலினால் அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக்கு குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலைவரிடம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இப்பணி முழுவேகத்தில் நடைபெறும் அதே சமயத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்சி சீரமைப்புகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழு, நவம்பர் 10-ம் தேதிக்குள் தனது பரிந்துரைகளை வழங்கிடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.