

கோப்புப் படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வரும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5-ம் தேதிகளில் திறப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளித்திறப்பை மாணவர் நலன் கருதி தள்ளி வைக்க திமுக, அதிமுக, மாணவர் அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதோடு, தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதிக்கு பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா என முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தள்ளி வைக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.