“நாங்கள் அண்ணன் - தம்பி போல் ஒற்றுமையாக இருக்கிறோம்” - எஸ்.பி. வேலுமணி

“நாங்கள் அண்ணன் - தம்பி போல்  ஒற்றுமையாக இருக்கிறோம்” - எஸ்.பி. வேலுமணி
Updated on
1 min read

கோவை: “அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டது. சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “வாக்களித்த மக்களுக்கும், என்னை வெற்றியடைய வைக்க உழைத்த மக்களுக்கும் நன்றி. அதிமுக எங்களின் உயிர் மூச்சு; நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. ஒரு சில பத்திரிகைகள் தவறாக சித்தரிக்கிறார்கள். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது. அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

தவெக இப்போது தான் வந்துள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபட வேண்டும். அதிமுக பல தோல்விகளை கண்டுள்ளது. அதைக் கண்டு நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சி.வி.சண்முகத்தின் கருத்துதான் எங்கள் கருத்து; எங்கள் கருத்து தான் அவரின் கருத்து” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சி.​வி.சண்​முகம் அணி எம்​எல்​ஏக்​களான எஸ்​.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் பழனி​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப்பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச் சென்​றனர். அங்கு இரு அணி​கள் சார்​பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலை​வரிடம் ஏற்​கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்​தனர்.

மேலும், அதி​முக​வின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக பழனி​சாமி, கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரை தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர். இந்த நிகழ்வில், சி.​வி.சண்​முகம் உடன் வரவில்​லை. அவர் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகத் தெரி​கிறது. அவருடன் மூத்த நிர்​வாகிகள் மேற்​கொண்ட சமரச​மும் தோல்​வி​யில் முடிந்​த​தாகக் கூறப்​படுகிறது.

இந்நிலையில், “அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டது. சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அண்ணன் - தம்பி போல்  ஒற்றுமையாக இருக்கிறோம்” - எஸ்.பி. வேலுமணி
கெயில் சாதனை உடைப்பு; சச்சின் பாராட்டு - புதிய ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சூர்யவன்ஷி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in