கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: அனு​ம​தி​யற்ற கல்வி நிறுவன கட்​டிடங்​களை வரன்​முறைப்​படுத்​து​வதற்கு விண்​ணப்​பிக்க, 2027 ஜூலை 5-ம் தேதி வரை மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தமிழகத்​தில் திட்​ட​மில்லா பகு​தி​களில் 2011 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்​னர் கட்​டப்​பட்டு இயங்கி வரும் அனு​ம​தி​யற்ற கல்வி நிறு​வனக் கட்​டிடங்​களை வரன்​முறைப்​படுத்த ஏற்​க​னவே வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், வரன்​முறைப்​படுத்​தும் திட்​டத்​தின் கீழ், இணை​யதள வழி​யில் விண்​ணப்​பிக்க 2027 ஜூலை 5-ம் தேதி வரை மீண்​டும் மறு​வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது.

இதுகுறித்​து, ஏற்​க​னவே வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்ட வழி​காட்​டு​தல்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்​லை.

எனவே, விருப்​ப​முள்​ளவர்​கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணை​யதளம் வழி​யாக விண்​ணப்​பங்​களை பதிவு செய்​ய​லாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in