திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலின் இந்தி பெயர் நீக்கம்: திமுக போராட்டத்தின் எதிரொலி

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழில் இருந்த எழுத்துகள். (அடுத்த படம்) திமுகவினர் போராட்டத்தை தொடர்ந்து அகற்றப்பட்ட எழுத்துகள்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழில் இருந்த எழுத்துகள். (அடுத்த படம்) திமுகவினர் போராட்டத்தை தொடர்ந்து அகற்றப்பட்ட எழுத்துகள்.

Updated on
1 min read

திருச்சி: ​தி​முக​வினர் போராட்​டத்​தைத் தொடர்ந்​து, திருச்சி கோட்ட ரயில்வே மேலா​ளர் அலு​வலக நுழைவு வாயி​லில் இருந்த ‘கர்​தவ்ய த்வார்’ இந்தி பெயர் உடனடி​யாக நீக்​கப்​பட்​டது.

திருச்சி ஜங்​ஷன் ரயில் நிலை​யத்​தில் உள்ள கோட்ட ரயில்வே மேலா​ளர் அலு​வல​கத்​துக்கு அண்​மை​யில் புதி​தாக நுழைவு வளைவு கட்​டப்​பட்​டது. இதில் ‘கர்​தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்​கிலம், தமிழ் ஆகிய​வற்​றில் மொழி பெயர்ப்பு செய்​யப்​ப​டா​மல், இந்தியின் உச்​சரிப்​பிலேயே பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இதற்கு முதல்​வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினரும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர். மேலும், இந்தி திணிப்பு நடவடிக்​கையை கண்​டித்து அந்த அலு​வல​கம் முன் நேற்று ஏராளமான திமுக​வினர் திரண்டு முற்​றுகைப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதற்கு கட்சியின் திருச்சி மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் வைரமணி தலைமை வகித்​தார். மேற்கு மாநகரச் செய​லா​ளர் மேயர் மு.அன்​பழகன் உள்​ளிட்​டோரும் இதில் பங்​கேற்​றனர்.

அப்​போது, மத்​திய அரசு இந்தியை திணிப்பதாகக் கூறி கண்​டன கோஷங்​களை எழுப்​பியதுடன், அதில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்​தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்​து, இந்த நுழைவு வாயி​லின் பெயரை ‘கடமை​யின் நுழைவு​வா​யில்’ என தமிழில் மாற்​றியமைக்​கப்​படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் அலு​வலக மக்​கள் தொடர்பு அலு​வலர் தெரி​வித்​தார்.

மேலும், நுழைவு வாயி​லில் இருந்த ‘கர்​தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்​கிலம், தமிழில் இருந்த எழுத்​துகள்​ உடனடி​யாகஅகற்​றப்​பட்​டன.

<div class="paragraphs"><p>திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழில் இருந்த எழுத்துகள். (அடுத்த படம்) திமுகவினர் போராட்டத்தை தொடர்ந்து அகற்றப்பட்ட எழுத்துகள்.  </p></div>
திருப்பூர் குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in