

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
பிரேமலதா (தேமுதிக): பேரவையில் உறுப்பினர்களுக்கு பணியாளர்கள் டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றனர்.
அவர்கள் மீண்டும், மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. அதனால், உறுப்பினர்களின் டேபிளில் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (திமுக): உறுப்பினர் நல்ல கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், அது ஏற்புடையது அல்ல. ஏனென்றால், கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு எறிய வாய்ப்புள்ளது.
தங்கம் தென்னரசு (திமுக): இது அவரது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக குறிப்பிடுகிறாரா?
பிரேமலதா: பாட்டில்தான் வீச வேண்டும் என்பதில்லை. டம்ளரைக் கூட வீசலாம். இவ்வாறு உறுப்பினர்கள் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.