“மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை” - அமைச்சர் ரமேஷ் கருத்து

அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்

அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

திருச்சி: தமிழகத்​தில் மதத்தை வைத்து அரசி​யல் செய்​பவர்​களுக்கு இட​மில்லை என இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்சர் ரமேஷ் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: தமிழகத்​தில் அனைத்து கோயில்​களி​லும் அனுமதிக்​கப்​பட்ட சேவைக் கட்​ட​ணம் மட்​டுமே வசூலிக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதைவிட கூடுதலாக வசூலித்​தால், பொது​மக்​கள் என் கவனத்​துக்கு கொண்டு வரலாம். கூடுதலாக வசூலிப்​பவர்​கள் மீது நட​வடிக்கை எடுக்க அரசு தயாராக உள்​ளது.

ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் நிர்​வாகத்தை சரிசெய்து, மக்​களுக்கு எந்​தெந்த திட்​டங்​கள் உடனடி​யாக தேவை என்​பதை வரையறுத்து, அவற்​றுக்கு முன்​னுரிமை அளித்து, டெண்​டர் வெளி​யிட்டு நிறைவேற்றி வரு​கிறோம்.

திருச்சி கிழக்கு தொகுதி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் போட்​டி​யிடுவ​தாக அறி​வித்​தால், அதை நாங்​கள் பார்த்​துக்​கொள்​கிறோம். திரு​வண்​ணா​மலை கோயிலுக்​குள் மாற்று மதத்​தினர் செல்​வதற்கு உரிய அனுமதி​யைப் பெற்ற பின்​னரே, தமிழக பொதுப்​பணித் துறை அமைச்​சரின் உதவியாளர் சென்​றார்.

தமிழகம் மதச்​சார்​பற்ற சமூக நீதிக்​கான மண். தமிழகத்​தில் மதத்தை வைத்து அரசி​யல் செய்​வோருக்கு இட​மில்லை. அனைத்து மதத்​தினரும் நம் மதத்​தினர் என்ற கோட்​பாட்​டுடன் முதல்​வர் விஜய் ஆட்சி செய்து வரு​கிறார். இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்</p></div>
சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in