சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்: ரகுபதி தகவல்

ரகுபதி |கோப்புப் படம்

ரகுபதி |கோப்புப் படம்

Updated on
1 min read

திருநெல்வேலி: சட்​டப்​பேரவை கதவு​களை மூடுங்​கள் என முதல்​வர் கூறியது உரிமை மீறல் செய​லாகும். இதை கண்​டிக்​கும் வகை​யில் கட்சி தலை​மை​யுடன் ஆலோ​சித்து சட்​டப்​பேர​வை​யில் உரிமை மீறல் பிரச்​சினை எழுப்ப முடி​வெடுப்​போம் என்று முன்​னாள் சட்​டத்​துறை அமைச்​சர் ரகுபதி தெரி​வித்​தார்.

தமிழக முதல்​வர் குறித்து அவதூறாகவும், மிரட்​டும் தொனி​யிலும் பேசி​ய​தாக கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள ஜீ.​வி.​மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏவை ரகுபதி மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் சந்​தித்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக ஆட்​சி​யில் பேச்​சுரிமை பறிக்​கப்​பட்​டுள்​ளது. வெள்​ளை​யர் ஆட்​சி​யில்​கூட இருந்த பேச்​சுரிமை விஜய் ஆட்​சி​யில் இல்​லை. அரசை விமர்​சித்து சாதாரண பேச்​சு​வாக்​கில் பேசுபவர்​கள் மீதெல்​லாம் பொய் வழக்கு பதிவு செய்​யப்​படு​கிறது. மேலும், சட்​டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்​கு​களை முடுக்​கி​விட டிஎஸ்​பிக்​கள் மூலம் நீதிப​தி​களுக்கே சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் அழுத்​தம் கொடுத்து வரு​கிறார்.

தவெக அரசு முழுக்க முழுக்க பாஜக​வின் ‘ஸ்​லீப்​பர் செல்​லாக’ இயங்​கு​கிறது. ஜனநாயகன் திரைப்​படத்​தில் நான்கு அமைச்​சர்​கள் நடித்​துள்ள சூழலில், கரூர் சம்​பவத்​தின்​போது கண்​ணீர் விடாதவர்​கள் இப்​போது அந்த படத்தை பார்த்​து​விட்டு கண்​ணீர் வடிக்​கிறார்​கள்.

எதிர்க்​கட்​சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்​டு. ஆனால், சட்​டப்​பேரவை கதவு​களை மூடுங்​கள் என முதல்​வர் கூறியது உறுப்​பினர்​களை சிறை வைப்​ப​தற்கு சமமான மிகப்​பெரிய ஜனநாயக உரிமை மீறலாகும். சட்​டப்​பேரவை தலை​வர் ஒருதலைப்​பட்​ச​மாகச் செயல்​பட்டு வரும் நிலை​யில், இதுகுறித்து கட்சி தலை​மை​யுடன் ஆலோ​சித்து சட்​டப்​பேர​வை​யில் உரிமை மீறல் பிரச்​சினை கொண்​டு​வரப்​படும்.

<div class="paragraphs"><p>ரகுபதி |கோப்புப் படம்</p></div>
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in