வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமா?- திருநாவுக்கரசர் எம்.பி. கேள்வி

வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமா?- திருநாவுக்கரசர் எம்.பி. கேள்வி
Updated on
1 min read

வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமல்ல என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.

திருப்பத்தூரில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. ஜனநாயக நாட்டில் இது இயல்பு தான். வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமல்ல. மத்திய அரசுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் சுமையை அதிகரிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 50 காசு, ரூ.1 உயர்த்திய போதெல்லாம் போராடியவர்கள், தற்போது தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கின்றனர். நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in