தேனி, திண்டுக்கல், மதுரைக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறும்

ஆந்​திரக் கடலோரப் பகுதிக்கு 28-ம் தேதி காலை நகர வாய்ப்பு
தேனி, திண்டுக்கல், மதுரைக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறும்
Updated on: 
2 min read

சென்னை: வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி தொடர்ந்து வலுப்​பெற்று நாளை புய​லாக மாறக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதன் காரண​மாக தேனி, திண்​டுக்​கல், மதுரை மாவட்​டங்​களுக்கு இன்று அதி​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: மத்​திய கிழக்கு, அதை ஒட்​டிய தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி​யாக வலுப்​பெற்​றுள்​ளது. இது மேலும் வலுப்​பெற்று காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக அதே பகுதி​களில் நில​வக்​கூடும்.

மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்​பெற்று, 25-ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாகவும், 26-ம் தேதி (நாளை) மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் புய​லாகவும் மாறக்​கூடும். இது தொடர்ந்து வலுப்​பெற்று மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் ஆந்​திரக் கடலோரப் பகுதிக்கு அருகே 28-ம் தேதி காலை நகர வாய்ப்பு உள்​ளது.

இதன் காரண​மாக இன்று தேனி, திண்​டுக்​கல், மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் அதி​க​னமழை (ரெட் அலர்ட்) பெய்​யக்​கூடும். கடலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், புதுக்​கோட்டை, அரியலூர், பெரம்​பலூர், திருச்சி, கரூர், நீல​கிரி, கோவை, திருப்​பூர், சிவகங்கை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமுதல் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்​யக்​கூடும்.

சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி, வேலூர், ராணிப்​பேட்டை, திருப்​பத்​தூர், திரு​வண்​ணா​மலை, நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்​னியாகுமரி மாவட்​டங்​களில் கனமழையும், தென்​காசி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், திருநெல்​வேலி மாவட்​டங்​களில் மித​மான மழையும் பெய்​யக்​கூடும்.

26-ம் தேதி (நாளை) சிவகங்கை, ராம​நாத​புரம், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். நீல​கிரி, கோவை, தேனி, மதுரை, திண்​டுக்​கல், விருதுநகர், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னியாகுமரி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் கனமழையும், மற்ற மாவட்​டங்​களில் மித​மான மழையும் பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்​னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக நீல​கிரி மாவட்​டம் பர்​லியாரில் 25 செ.மீ. கீழ்​கோத்​தகிரி எஸ்​டேட்​டில் 20 செ.மீ. குன்​னூரில் 17 செ.மீ. அழகரை எஸ்​டேட்​டில் 16 செ.மீ. கோவை மாவட்​டம் மேட்​டுப்​பாளை​யத்​தில் 15 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

‘அர்​னாப்’ புயல்: வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நாளை புய​லாக வலுப்​பெறக்​கூடும். இந்த புயலுக்கு ‘அர்​னாப்’ என பெயரிடப்​பட உள்​ளது. இந்த பெயரை வங்​கதேசம் பரிந்​துரை செய்​துள்​ளது.

அர்​னாப் என்ற சொல்​லுக்கு பெங்​காலி (பங்​களா) மொழி​யில் பெருங்​கடல் என்று பொருள். அதற்கு அடுத்து உரு​வாகும் புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் வைக்​கப்​பட உள்​ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்.துரை தெரி​வித்​துள்​ளார்.

தேனி, திண்டுக்கல், மதுரைக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறும்
“பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை” - அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in