புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைகளை சரிசெய்ய முடிவு: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் |கோப்புப் படம்

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் |கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ஏற்கவில்லை. அதிலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்ட அறிக்கை: நமது 23 ஆண்டுகால போராட்டத்தின் பலனாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், 30 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு 50% ஓய்வூதியம், பணிக்கொடையாக ரூ.25 லட்சம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இது நமக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. இதனால் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், ஜன.6-ம் தேதி முதல்திட்டமிடப்பட்ட காலைவரையற்ற வேலைநிறுத்தமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல், பழைய ஓய்வூதியத்தில் இருந்த பல்வேறு சாதகமான அம்சங்கள், தற்போது புதிய திட்டத்திலும் உள்ளன. எனினும், இதை முழுமையான ஓய்வூதியமாக பார்க்கவில்லை. தற்போதைய திட்டத்தில் மாதம் 10% பிடித்தம் செய்தை ஏற்கவில்லை.

இந்த முறையை முழுவதுமாக ரத்து செய்தல், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திரும்ப வழங்குதல், ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தை 25 ஆண்டுகளாக குறைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். மேலும், மீதமுள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் |கோப்புப் படம்</p></div>
திருச்சியில் களைகட்டிய ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ - அமித் ஷா வாழ்த்து ‘மிஸ்’ ஆனதால் பெண்கள் அதிருப்தி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in