உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 25-ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வில் குளறுபடியும், முறைகேடும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைத்தொடர்ந்து, உதவி பேராசிரியர் தேர்வு முடிவு குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும், தேவைப்பட்டால் தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

உயர்கல்வி செயலருடன் சந்திப்பு இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இதுதொடர்பாக அரசு விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி, நேற்று உயர்கல்வித்துறை செயலர் வி.அருண்ராயை சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையின்படியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் தேர்வில் எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை என்று அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விளக்கம் அளித்துள்ளதாக வும் டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன.

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்
ஜூலை 5-ல் லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்: உதயநிதி உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in