புதுச்சேரியில் மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம்; மொத்த விற்பனைக்கு தடை

விதி மீறினால் உரிமம் ரத்து என கலால் துறை உத்தரவு
பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம் தரவேண்டும். மொத்த விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விதி மீறினால் உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலால் துறை துணை ஆணையல் மாத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட உத்தரவு: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை என புகார்கள் வந்துள்ளன.

மதுபானம் வழங்கும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள் / ஓட்டல்கள் / உணவகங்களின் அனைத்து உரிமதாரர்களுக்கும், வாங்கப்பட்ட அளவைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான ரசீதை தரவேண்டும். அதேபோல் மதுபானம் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு கொள்முதலுக்கும் ரசீது வழங்காதது, மொத்த விற்பனையை மறைப்பதைக் காட்டுவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மதுபானம் விற்பனை செய்வதற்கு உரிமதாரர் சாக்குப்போக்கு சொல்லவும் வழிவகுக்கிறது.

மேலும், ரசீதுகள் இல்லாமல் விற்கப்படும் எந்தவொரு மதுபான விற்பனையும் (அளவைப் பொருட்படுத்தாமல்), புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ல் ஈடுபட்டுள்ள நபர்கள், வாக்காளர்களைத் தூண்டுவதற்காக மதுபானத்தைக் குவித்து வைக்க உரிமதாரருக்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்று இப்போது கருதப்படுகிறது.

அதன்படி, செல்லுபடியாகும் ரசீதுகள் இல்லாத அனைத்து விற்பனைகளும் மொத்த விற்பனையாகக் கருதப்படும்.எனவே, புதுச்சேரி மண்டலத்தின் அனைத்து மதுபான உரிமதாரர்கள் / குத்தகைதாரர்களும், முறையான ரசீதுகளுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட விற்பனை அளவிற்குள் மதுபானங்களை விற்குமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இதில் ஏற்படும் எந்தவொரு தவறும் மிகவும் கடுமையாகக் கருதப்பட்டு, புதுச்சேரி கலால் சட்டம் 1970-இன் பிரிவு 28(1)(e)-இன் கீழ் உரிமங்கள் இடைநீக்கமோ ரத்தோ செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
“உங்கள் தோல்விகளை மறைக்கவே ‘இந்தித் திணிப்பு’ வாதம்...” - முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in