“திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதே!” - அழுத்தும் ஆர்.பி.உதயகுமார்

“திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதே!” - அழுத்தும் ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

“திமுக-வின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆர் பணி குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பொங்கல் பரிசாகரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ. 3 ஆயிரம் அறிவிக்கிறார். அதுவும் தேர்தல் நெருங்குவதால் இதை அறிவித்துள்ளார்.

அதேபோன்று, அவர் கடந்த நான்கரை ஆண்டுகளில் மடிக்கணினி வழங்காமல் தற்போது இத்திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் வாக்குகளுக்காக, அவர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை அமல்படுத்தாமல் பெயரை மாற்றி புதிதாக ஓர் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. மேலும், இத்திட்டத்துக்கான ஊதியத்தையும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது.

இந்த 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அறிவித்தார். ஆனால், தற்போது, 50 நாட்கள்கூட முழுமையாக நடைபெறாமல், அதற்கான ஊதியத்தைக்கூட முறையாக கொடுக்காமல், பொய்க் கணக்கு காட்டி, உழைப்பவர்களின் உழைப்பை திமுக சுரண்டுகிறது.

மீண்டும் தமிழகத்தில் பழனிசாமி ஆட்சிக்கு வரும்போது, இத்திட்டம் பொங்கல் பரிசாக 150 நாளாக உயர்த்தி செயல்படுத்தப்படும். திமுக-வின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான். அதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கனிமொழி தலைவராக உள்ளார். மக்களை வாழ வைப்பதாக இல்லாமல் குடும்ப ஆட்சியை வாழ வைப்பதாகத்தான் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும். ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை வாழவைக்கும்.

தேர்தல் வரும் போதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் ஞாபகம் வரும். தேர்தல் முடிந்த பின்பு மக்களைப் பற்றி சிந்திக்க மறந்து விடுவார். தேர்தலுக்காக திமுக வழங்கும் திட்டங்கள் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான். எனவே, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தியான பழனிசாமி, மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

“திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதே!” - அழுத்தும் ஆர்.பி.உதயகுமார்
“அதிகாரப் பகிர்வை விவாதிக்கும் நேரம் வந்துவிட்டது” - காங்கிரஸ் எம்.பி கருத்தால் கடுகடுக்கும் திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in