

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காத பிஎச்எச், ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை இன்று (அக்டோபர் 1) முதல் தற்காலிகமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. அதேநேரம் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகைப்பதிவு (e-KYC) 96.69 சதவீதமாகும். அரசின் சார்பில் கைவிரல் ரேகைப் பதிவுக்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஜூலை மாதம் 95.44% இருந்த கைவிரல் ரேகை பதிவு சரிபார்ப்பு, நேற்று 96.69% உயர்ந்துள்ளது. இதன் மூலமாக 4 லட்சத்து 49,663 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். எனினும், கைவிரல் ரேகைப்பதிவு செய்யாதகுடும்ப அட்டைதாரர்கள், ரேஷன் கடைக்கு செல்லும்போது, கை விரல்ரேகை, கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்கள் தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.