திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டி கால் விரலை கடித்து குதறிய எலி

திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து இடது கால் கட்டை விரலில் காயமடைந்த தமிழ்க்கொடி.

திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து இடது கால் கட்டை விரலில் காயமடைந்த தமிழ்க்கொடி.

Updated on
1 min read

திருச்சி: ​திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சை​யில் இருந்த மூதாட்​டி​யின் கால் விரலை எலி கடித்து குதறிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திருச்சி பொன்​மலைப்​பட்​டியைச் சேர்ந்​தவர் ரத்​தினம் மனைவி தமிழ்க்​கொடி(68). இவர் கால் முறிவு பிரச்​சினைக்​காக சில நாட்​களுக்கு முன்பு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்​து​வ​மனை​யில் பொது வார்​டில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தமிழ்க்​கொடிக்கு ஜூலை 20-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது. அவருக்கு உதவி​யாக அவரது மகன் விஜய​கு​மார் இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், நேற்று காலை 5 மணி​யள​வில் எழுந்த விஜயகு​மார், அவரது தாய் தமிழ்க்​கொடி​யின் படுக்​கை​யில் இருந்து எலி ஓடு​வதை கண்​டார்.

இதையடுத்​து, அரு​கில் சென்று பார்த்​த​போது, தமிழ்க்​கொடி​யின் இடது கால் கட்டை விரலில் பாதியை எலி கடித்து தின்​று​விட்​டதும், விரலில் இருந்து ரத்​தம் வழிந்​தோடிக் கொண்​டிருந்​ததும் தெரிய​வந்​தது.

தமிழ்க்​கொடி சர்க்​கரை நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததால் எலி கடித்​ததை உணர முடிய​வில்​லை. இதுகுறித்து மருத்​து​வ​மனை பணி​யாளர்​களுக்கு விஜயகு​மார் தகவல் அளித்​தார். இதையடுத்​து, மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் அவசர அவசர​மாக தமிழ்க்​கொடியை, தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து விஜயகு​மார் கூறுகை​யில், “நாங்​கள் இருந்த வார்​டில் பகல் வேளை​யிலேயே எலித் தொல்லை அதி​க​மாக உள்​ளது. இதுபற்றி 3 நாட்​களாக மருத்​து​வ​மனை ஊழியர்​களிடம் புகார் அளித்​தும் நடவடிக்கை எடுக்​காத​தால், இப்​போது எனது அம்மா கால் விரலை இழந்​துள்​ளார். மருத்​து​வ​மனைக்கு வரும் ஏழை மக்​கள் மற்​றும் அவர்​களு​டன் வரு​வோரின் நலனை கருத்​தில் கொண்டு பாது​காப்​பான சூழலை மருத்​து​வ​மனை நிர்​வாகம் உறுதி செய்ய வேண்​டும்’’ என்​றார்.

மருத்துவர்கள் விளக்கம்: இதுகுறித்து திருச்சி அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் தெரி​வித்​த​தாவது: திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் வாரம்​தோறும் சனிக்​கிழமை​களில் ஒருங்​கிணைந்த தூய்​மைப்​பணி நடை​பெறுகிறது. இதில், எலி உள்​ளிட்​டவை வார்​டுக்​குள் வராத​படி தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

சம்​பவம் நடை​பெற்ற அந்த வார்​டில் உணவு வாசனையைக் கொண்​டு, அதை சாப்​பிடு​வதற்​காக வார்​டின் கதவு வழி​யாக வெளியே இருந்து எலி வந்​துள்​ளது. அப்​போது சிகிச்​சையி​லிருந்த மூதாட்​டி​யின் காலை கடித்​துள்​ளது. இதுகுறித்து தகவல் வந்த உடனே மூதாட்​டிக்கு உரிய சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. மூதாட்டி இப்​போது நலமாக உள்​ளார் என்​றனர்​.

<div class="paragraphs"><p>திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து இடது கால் கட்டை விரலில் காயமடைந்த தமிழ்க்கொடி.</p></div>
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in