தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்வுதள வசதிகள்

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்வுதள வசதிகள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக வாக்களிக்க ஏது​வாக சாய்​வுதள வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ளன எனத் தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து இது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் வரும் ஏப்​.23 அன்று சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக வாக்​களிக்க ஏது​வாக வாக்​குச்​சாவடிகளில் சாய்​வுதள நடை​பாதை உள்​ளிட்ட வசதி​களைச் செய்து கொடுக்​கக்​கோரி மாற்​றுத் திற​னாளி​யான வைஷ்ணவி ஜெயக்​கு​மார் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில், “தேர்​தலின்​போது மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சட்ட விதி​களை அமல்​படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்​தல் அதி​காரி​களான அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் ஏற்​கெனவே அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சாய்​வுதள வசதியை ஏற்​படுத்​தத் தேவை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக முழு​மை​யான விவரங்​களு​டன் மனுத் தாக்​கல் செய்​யப்​படும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், மாற்​றுத் திற​னாளி​கள் வாக்​குச்​சாவடிகளை எளி​தில் அணுகும் வகை​யில் அமைக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட்டு விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளனர்.

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்வுதள வசதிகள்
தொழிலாளர்களுக்கு ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in