இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்

சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்
Updated on: 
1 min read

சென்னை: இலங்கை சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட ராமேசுவரம் மீன​வர்​கள் 16 பேர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்​து சேர்ந்தனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் ராமேசுவரத்​தைச் சேர்ந்த 11 மீன​வர்​கள் கடந்த ஆக.5-ம் தேதி விசைப்​படகில் கடலுக்​குச் சென்று மீன் பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது அங்கு வந்த இலங்கை கடலோரக் காவல் படை​யினர், எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி 11 பேரை​யும் கைதுசெய்​தனர். அதே​போல் ஆக.12-ம் தேதி மீன்​பிடிக்​கச் சென்ற 9 ராமேசுவரம் மீன​வர்​களும், எல்லை தாண்டி மீன்​பிடித்​தாக இலங்கை கடற்​படை​யின​ரால் கைது செய்​யப்​பட்​டனர்.

இலங்கை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட 20 மீன​வர்​களும் இலங்கை சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், 20 மீன​வர்​களுக்​கும் தலா ரூ.50 ஆயிரம் அபரா​தம் விதித்​து, அபரா​தத் தொகையை செலுத்​தி​னால் விடு​தலை என்று இலங்கை நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதில் 16 மீன​வர்​கள் அபரா​தத் தொகையை செலுத்​தி​ய​தால் விடு​தலை செய்​யப்​பட்​டனர். மற்ற 4 மீன​வர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். விடுவிக்​கப்​பட்ட 16 மீன​வர்​களும் இந்​திய தூதரக அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். இந்​திய தூதரக அதி​காரி​கள் 16 மீன​வர்​களை​யும் விமானம் மூலம் சென்​னைக்கு அனுப்ப ஏற்​பாடு​கள் செய்​தனர்.

இதையடுத்​து, இலங்கை தலைநகர் கொழும்​பில் இருந்து 16 மீன​வர்​களும் விமானத்​தில் நேற்று சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். விமான நிலை​யத்​தில் அ​வர்​களை தமிழக அரசின் மீன்​வளத்​துறை அதி​காரி​கள் வரவேற்று, வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்​தனர்​.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்
தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in