தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
Updated on: 
1 min read

மதுரை: தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறினார்.

மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான அரசு துறைகளில் நிலுவைப் பணி நியமனம் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறையில் வித்தியாசம் உள்ளது.

இதுபற்றி ஆய்வு நடத்த வேண்டும். தற்போதைய முதல்வர் விஜய் அரசு ஓரளவுக்கு நன்றாக நடக்கிறது என்றாலும், சாதிய மோதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சாதிய மோதல்களை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறுமையை ஒழிக்க, ஒவ்வொரு ஊராட்சியிலும் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். நிலத்தை அரசே விலைக்கு வாங்கியாவது கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X