பரந்தூர் பகுதி மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பரந்தூர் பகுதி மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பரந்தூர் மக்​களின் உரிமை​களும், வாழ்​வா​தா​ர​மும் பாது​காக்​கப்பட வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காஞ்​சிபுரம் மாவட்​டம், பரந்​தூர் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள கிராமங்​களில் வாழும் மக்​கள் கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக தங்​களது வாழ்​வுரிமை, நில உரிமை மற்​றும் எதிர்​கால தலை​முறை​களின் நலனைப் பாது​காக்​கும் நோக்​கில் தொடர்ந்து போராடி வரு​கின்​றனர்.

பரந்​தூரில் புதிய விமான நிலை​யம் அமைக்​கும் திட்​டம் அறிவிக்​கப்​பட்ட நாளி​லிருந்தே அப்​பகுதி மக்​கள் பல்​வேறு ஜனநாயக ரீதி​யான போராட்​டங்​களை​யும் சட்​ட ரீ​தி​யான நடவடிக்​கைகளை​யும் முன்​னெடுத்து வரு​கின்​றனர்.

அந்த கால​கட்​டத்​தில் நானும் அவர்​களுக்​காக குரல் கொடுத்​தேன். விமான நிலைய திட்​டத்​தால் ஏற்​கெனவே அச்​சத்​தி​லும் உறு​தி​யற்ற நிலை​யிலும் வாழ்ந்து வரும் மக்​களுக்கு தற்​போது மீண்​டும் சிப்​காட் தொழிற்​பேட்டை அமைக்​கப்பட உள்​ள​தாக பரவிவரும் தகவல்​கள் மேலும் மன உளைச்​சலை​யும் பதற்​றத்​தை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளன.

வளர்ச்​சித் திட்​டங்​கள் அவசி​ய​மானவை​தான். ஆனால் அவை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை அழித்​தும், விவ​சாயநிலங்​களை பறித்​தும், உள்​ளூர் மக்​களின் உரிமை​களைப் புறக்​கணித்​தும் மேற்​கொள்​ளப்​படக்​கூ​டாது.

அப்​பகுதி மக்​களின் கருத்​துக்​களுக்கு உரிய மதிப்​பளித்​து, அவர்​கள் வாழ்ந்து வரும் நிலங்​களி​லேயே பாது​காப்​பாக​வும் கண்​ணி​ய​மாக​வும் வாழ்​வதற்​கான உத்​தர​வாதத்தை அரசுகள் வழங்க வேண்​டும்.

மக்​களின் உரிமை​களை மீறி, அவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாதிக்​கும் வகை​யில் எந்​தத் திட்​டங்​களும் திணிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டால், என் தலை​மை​யில் மக்​களின் உரிமை​களைப் பாது​காக்​கும் வகை​யில் மாபெரும் ஜனநாயக ரீதி​யான போராட்​டம் முன்​னெடுக்​கப்​படும்.

பரந்​தூர் மக்​களின் உரிமை காக்​கப்பட வேண்​டும். விவ​சாய நிலங்​கள் பாது​காக்​கப்பட வேண்​டும். மக்​களின் வாழ்​வா​தா​ரம் பறிக்​கப்​படக் ​கூ​டாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

பரந்தூர் பகுதி மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in