பொதுச் சின்னத்தில் போட்டி: ‘மாம்பழம்’ இல்லாததால் ‘தலைக்கவசம்’ கேட்கும் ராமதாஸ்

பொதுச் சின்னத்தில் போட்டி: ‘மாம்பழம்’ இல்லாததால் ‘தலைக்கவசம்’ கேட்கும் ராமதாஸ்
Updated on
1 min read

எந்தப் பக்கமும் எதிர்பார்த்த ‘அழைப்பு’ இல்லாததால் கடைசி முயற்சியாக சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கைகோத்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

”நாங்கள் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவோம்” என சசிகலா ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால், ராமதாஸால் உருவாக்கப்பட்ட ‘மாம்பழம்’ சின்னம் தற்போது அவர் வசம் இல்லை. அதைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்று தெரியாத நிலையில், இந்தத் தேர்தலுக்கு புதிதாக இன்னொரு சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் ராமதாஸ்.

அதன்படி, தங்கள் கட்சிக்கு பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை அவர் அணுகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டால் தங்களுக்கான சின்னமாக தலைக்கவசத்தை (ஹெல்மெட்) ராமதாஸ் தரப்பில் தேர்வு செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பொதுச் சின்னத்தில் போட்டி: ‘மாம்பழம்’ இல்லாததால் ‘தலைக்கவசம்’ கேட்கும் ராமதாஸ்
“சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை” - பாமக எம்எல்ஏ அருள் அதிருப்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in