‘நீங்கள் கூட முதல்வர் வேட்பாளராகலாம்’ - சீரியஸாக சொல்லி சிரிக்க வைத்த ராமதாஸ்

Ramadoss

ராமதாஸ்

Updated on
1 min read

தமி​ழ​கம், புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான தேர்​தல்​அறிக்​கையை பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்​டார். தேர்​தல் அறிக்​கை​யில் முதி​யோ​ருக்கு அரசு பஸ், ரயி​லில் இலவச பயணம், மகளிருக்கு உரிமைத் தொகை 3,000 என்று பல்​வேறு அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டன.

இந்​தத் தேர்​தலில் சசிகலா​வின் புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் கட்​சி​யுடன் ராம​தாஸ் கூட்​டணி அமைத்​துள்​ளார். தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட்ட பின் ராம​தாஸ் பேட்​டியளித்​தார்.

அப்​போது அவர் கூறுகை​யில், “எங்​கள் கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகள் வர வாய்ப்பு உள்​ளதா என்று கேட்​கிறீர்​கள். வாய்ப்பு இருக்​கும்​... இல்​லாமலும் போகும். வேட்​பாளர் பட்​டியல் விரை​வில் அறிவிக்​கப்​படும். எங்​கள் கூட்​ட​ணிக் கட்​சித் தலைவி சசிகலா​வுடன் ஆலோ​சனை நடத்​திய பிறகு, அவர்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள், எங்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள் என்ற முடிவுக்கு வரு​வோம். தொகு​தி​கள் இறுதி செய்​யப்​பட்டு வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாகும்” என்​றார்.

ராம​தாசிடம் செய்​தி​யாளர்​கள் உங்​கள் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாளர் யார்? என்று கேள்வி எழுப்​பினர். என்ன சொல்​வதென்று சில விநாடிகள் யோசித்த ராம​தாஸ், “நீங்​களாகக் கூட இருக்​கலாம்!” என்று கூறி சிரிப்​பலையை ஏற்​படுத்​தி​னார்​.

Ramadoss
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in