பாமக பெயர், மாம்பழ சின்னம், கொடியை அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு

பாமக பெயர், மாம்பழ சின்னம், கொடியை  அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு
Updated on
1 min read

பாமக-வில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸூக்கும், அக்கட்சியின் தலைவரான அன்புமணிக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகன் அன்புமணிக்கு போட்டியாக பாமக செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்துள்ளார்.

அன்புமணி தலைமையிலான பாமக-வை அங்கீகரித்தும், அவரது தலைவர் பதவியை நீட்டித்தும், மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்புக்கு வழங்கியும் தேர்தல் ஆணையம் கடந்தாண்டு அன்புமணி தரப்புக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில் பாமக-வுக்கு நான் தான் தலைவர் என சொந்தம் கொண்டாடி பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

அதில், ‘பாமக தலைவர்’ எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய இரு கடிதங்களும் சென்னை தி.நகரில் அன்புமணி ஏற்கெனவே வசித்த திலக் தெருவுக்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முகவரியை தேர்தல் ஆணையத்தில் அதுதான் பாமகவின் அலுவலக முகவரி என தேர்தல் ஆணையத்தில் அன்புமணி முறைகேடாக பதிவு செய்து வைத்துள்ளார். உண்மையில் பாமகவின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ள நாட்டு முத்து நாயக்கன் தெருவில் தான் ஆரம்பகாலகட்டத்தில் இருந்து இயங்கி வருகிறது.

தற்சமயம் திண்டிவனம் தைலாபுரத்திலும் கூடுதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே திலக் தெருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை திரும்பப்பெற்று, பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என அங்கீகரித்து, அந்த கடிதங்களை எங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல அன்புமணிக்கு மாம்பழ சி்ன்னம் வழங்கியும், பாமகவின் தலைவர் என பதவியை நீட்டித்தும் வழங்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் கடிதங்களை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியுள்ளார்.

இதேபோல பாமக பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ பாமகவின் பெயரையோ, கட்சி கொடியையோ அல்லது மாம்பழ சின்னத்தையோ அன்புமணியோ அல்லது வேறு யாருமோ பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும், என கோரியுள்ளார். இந்த 3 மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பாமக பெயர், மாம்பழ சின்னம், கொடியை  அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு
விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை - குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in