திமுக ஆட்சி திராவிட மாடல் என்றால் தவெக ஆட்சி திருச்சபை மாடல்: ராம.ரவிக்குமார் விமர்சனம்

ராம.ரவிக்குமார்

ராம.ரவிக்குமார்

Updated on
1 min read

ம​யிலாடு​துறை: திமுக ஆட்சி திரா​விட மாடல் அரசு என்​றால், தவெக ஆட்சி திருச்​சபை மாடல் அரசாக உள்​ளது என இந்து தமிழர் கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் ராம.ரவிக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

மயி​லாடு​துறை அருகே செம்​ப​னார்​கோ​விலில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: திமுக ஆட்சி திரா​விட மாடல் அரசு என்று சொன்​னார்​கள். தற்​போது அமைந்​துள்ள விஜய் தலை​மையி​லான தவெக ஆட்சி திருச்​சபை மாடல் அரசாக செயல்​படு​கிறது. திரா​விட மாடலும், திருச்​சபை மாடலும் வெவ்​வேறு முகமூடிகளாக இருக்​கின்​றன.

தமிழகத்​தில் அரசமைப்​பில் பதவி​யேற்​கும் ஒரு​வர் பைபிள் வசனம் சொல்​வதும், உயர் பதவி​களில் இருப்​பவர்​கள் குறிப்​பிட்டஒரு மதத்​தைச் சார்ந்​தவர்​களாக இருப்​பதும் திருச்​சபை மாடலுக்கு எடுத்​துக்​காட்​டாக உள்​ளன. திமுக ஆட்சி பொறுப்​பேற்​ற​போது கோயில்​களில் எவ்​வளவு பணம் கையிருப்பு இருந்​தது? தற்​போது எவ்​வளவு உள்​ளது? என்​பதை தமிழக அரசு வெள்ளை அறிக்​கை​யாக வெளி​யிட வேண்​டும்.

தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்​த தலை​வர் ராகுல் ​காந்​தி​யிடம் தமிழக முதல்​வர் பேசி, மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் கர்​நாட​கா​வின் முயற்​சியை தடுத்து நிறுத்த வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்​று​வதற்கு உரிய சட்ட உத்​தரவை இந்த அரசு பின்​பற்​றும் என நம்​பு​கிறோம். இல்​லை​யென்​றால் அதன் பலனை அனுப​விப்​பார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>ராம.ரவிக்குமார் </p></div>
விஜய் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்: நடிகர் சிவக்குமார் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in