1961 காவிரி வெள்ளப் பெருக்கின்போது புதைந்த 1,008 சிவலிங்கங்களை மீட்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த சப்த கன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ரமேஷ், எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்டோர்.

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த சப்த கன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ரமேஷ், எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: ​கா​விரி ஆற்​றில் 1961-ல் ஏற்பட்ட வெள்​ளத்​தில் நேமம் பகு​தி​யில் புதைந்த 1,008 சிவலிங்​கங்​களை மீட்க வேண்​டும் என முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திருக்​காட்​டுப்​பள்ளி அருகே நேமம் கிராமத்​தில், அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்​கட்​டளை சார்​பில், சப்த கன்​னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்​பணிக்​கான பூமி பூஜை, பேரரசர் பெரும்​பிடுகு முத்​தரையர் சுவரன்​மாறன் 1351-வது சதய​விழா, முத்​தரையருக்கு அஞ்​சல் தலை வெளி​யிட்ட மத்​திய அரசுக்கு நன்றி தெரிவிக்​கும்விழா என முப்​பெரும் விழா நேற்று நடை​பெற்​றது.

இதில், முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த், சப்த கன்​னியர் மாகாளத்து காளாபிடாரி கோயில் பூமி பூஜையை தொடங்​கி, கல்​வெட்டை திறந்​து​வைத்து பேசி​யது: இந்த மண்ணை தெய்​வீக ஆற்​றலால் நிரப்ப 1,008 சிவலிங்கங்​களை பெரும்​பிடுகு முத்​தரையர் நிறு​வி​யுள்​ளார். 1961-ல் காவிரி​யில் பெரும் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடிய​போது, சிவலிங்​கங்​கள் நீரில் மூழ்கி பூமிக்​குள் அடைக்​கல​மாகின.

இந்த வரலாற்று பொக்​கிஷங்​களை மீட்​டெடுக்​கும் பணியைதொடர வேண்​டும். நமது முன்​னோரின் பக்​தியை எதிர்​கால சந்​த​தி​யினர் கண்​டு​களிக்​கும் வகை​யில் ஒரு நினை​விடத்​தைக் கட்​டு​வோம். ஜென் ஸி தலை​முறை​யினர் நேர்​மை​யும், கருணை​யும் கொண்டு சமூகத்​துக்கு மட்​டுமல்​லாமல், ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் சேவை செய்​யும் நெறி​முறைமிக்க தலை​வர்​களாக முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், அமைச்​சர் ரமேஷ்பேசும்​போது, போருக்​குப்போகும்போதே வாகைப்​பூவைச் சூட்​டிக் கொள்வார் பெரும்​பிடுகு முத்​தரையர். அதேபோல முதல்​வர் விஜய் தவெக​வைத் தொடங்​கும்​போதே, கொடி​யில் வாகைப்​பூவைச் சூடி, ஆட்சி அமைத்​தார் என்​றார். இதில் அறங்​காவலர் மீ.சந்​திரசேகரன், எம்​எல்ஏ ஆர்​.​விஜய் ​சர​வணன், முத்​தரையர் முன்​னேற்ற சங்க மாநில இளைஞரணித் தலை​வர் ஆர்​.​வி.பரதன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த சப்த கன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ரமேஷ், எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்டோர்.</p></div>
“தவெக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்”: உதயநிதி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in