100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - செங்கல்பட்டு ஆட்சியர் துவக்கிவைப்பு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - செங்கல்பட்டு ஆட்சியர் துவக்கிவைப்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சோளிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியிலிருந்து மாமல்லபுரம் வரை சுமார் 35 கி.மீ தூரம் 11,800 பேர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இதுகுறித்து அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், ‘ செங்கல்பட்டு மாவட்டம், சோளிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியையையும், விழிப்புணர்வு சுடர் விளக்கினையும் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மாலதி ஹெலன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி கல்லூரி கூட்டரங்கில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்பேரணி 5 கி.மீ பயணித்து திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட படூர் ரவுண்டானாவை சென்றடைந்தது. அங்கு தேர்தல் வழிப்புணர்வு சுடர்விளக்கை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு தயார் நிலையில் இருந்த பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் 100 நபர்களின் இருசக்கர மோட்டார் வாகன அணிவகுப்பினை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வழிநடத்தி சென்ற வாகன பேரணி கேளம்பாக்கத்தில் முடிவடைந்தது. அங்கு தேர்தல் விழிப்புணர்வு சுடர் விளக்கை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு 50 மூன்று சக்கர ஆட்டோ தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்கள்.

அதனை தொடர்ந்து, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் மகளீர் சுய உதவிக்குழுவினரின் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர், 50 நான்கு சக்கர மகிழுந்துகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்கள். தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற படகுகள் மூலம் மீனவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தேர்தல் ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் 100 சதவிகித வாக்குபதிவினை வழியுறுத்தி அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை ஆட்சியர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து 100 சதவிகித வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாமல்லபுரத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ”எனது வாக்கு எனது பெருமை” என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்ட அரசு பேருந்துகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மணியரசன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி(மகளீர் திட்டம்) திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - செங்கல்பட்டு ஆட்சியர் துவக்கிவைப்பு
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in