பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தினார்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in