மாநிலங்களவை எம்.பி. பதவி அன்புமணிக்கு உறுதியானது

Anbumani

அன்புமணி

Updated on
1 min read

பாமக-வில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவி வரும் பிரச்சினையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கட்சியில் உள்ள 5 எம்எல்ஏ-க்களில் ஜி.கே.மணி, இரா.அருள் ராமதாஸுக்கு ஆதரவாக உள்ளனர். எஸ்.பி.வெங்கடேஸ்வரன், எஸ்.சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோரும் கட்சி நிர்வாகிகளில் பெரும்பலானோரும் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். கட்சியும், மாம்பழம் சின்னமும் தனது பக்கமே இருப்பதால், அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகள் அன்புமணிக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.-க்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 2 எம்.பி.-க்கள் அதிமுகவுக்கு கிடைக்கவுள்ள நிலையில், அதில் ஒரு எம்பி பதவியை அன்புமணிக்கு விட்டுக்கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது. அதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகவுள்ளது.

Anbumani
“ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்து விட்டார்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in