மாநிலங்களவைத் தேர்தல்: திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி!

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

Updated on
1 min read

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாகியுள்ளனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ‘2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்</p></div>
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in