மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு!
Updated on
1 min read

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மு. தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாகியுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு!
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in