சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை கனமழை வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை கனமழை வாய்ப்பு!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை (Easterly waves) நிகழ்வு தற்போது நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜன.24) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும், 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் 25 தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை கனமழை வாய்ப்பு!
“பாஜக கூட்டணிக்கு தமிழகம் எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” - மோடி ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதிலடி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in