டெல்டா மாவட்டங்களில் மார்ச் 19, 20-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 19, 20-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர். துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மார்ச் 21, 22 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். மார்ச் 23-ல் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 19, 20-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
“ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in