3 மாவட்டங்களில் இன்று கனமழை

3 மாவட்டங்களில் இன்று கனமழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கோவை உள்​ளிட்ட 3 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடமேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகு​தி, வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் நில​வு​கிறது. இது அடுத்த 2 நாள்​களில் மேலும் வலுப்​பெறக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று (ஜூலை 4), கோவை, நீல​கிரி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்​யக்​கூடும். 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லாரில் 6 செமீ, நீல​கிரி மாவட்​டம் அவலாஞ்​சி, கோவை மாவட்​டம் உபாசி​யில் தலா 5 செமீ, சின்​கோ​னா​வில் 4 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

3 மாவட்டங்களில் இன்று கனமழை
கரூர் நெரிசல் வழக்கு: தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in