கோவை, தேனி உள்ளிட்​ட 9 மாவட்டங்களில்​ இன்று கனமழை வாய்ப்பு

சென்​னை வானிலை ஆய்​வு மையம்​ தகவல்​
Heavy rain
Updated on
1 min read

சென்​னை: தமிழகத்​தில் கோவை, தேனி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடலோர கர்​நாடக பகு​தி​களி​லிருந்து கடலோர ஆந்​திர பகு​தி​கள் வரை சுமார் 3.1 கி.மீ முதல் 4.5 கி.மீ உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (ஜூன் 9) வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், சென்னை மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்​யக்​கூடும். திருநெல்​வேலி மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, கன்​னி​யாகுமரி, தரு​மபுரி, சேலம் மற்​றும் ஈரோடு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை இன்று ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 104 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று முதல் 12-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​தில் 11 செ.மீ, நாலு​முக்​கில் 10 செ.மீ, காக்​காச்​சி​யில் 9 செ.மீ, கோவை மாவட்​டம் உபாசி, சின்​னக்​கல்​லார், திருநெல்​வேலி மாவட்​டம் மாஞ்​சோலை​யில் தலா 8 செ.மீ, கோவை மாவட்​டம் வால்​பாறை, சின்​கோ​னா, கன்​னி​யாகுமரி ​மாவட்​டம்​ சிற்​றாறில்​ தலா 6 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது.

Heavy rain
தவெக வலைவீச்சில் அல்லாடும் அதிமுக - என்ன செய்யப் போகிறார் பழனிசாமி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in