ராஜஸ்தானில் எல்லைத் தொடர்பை மேம்படுத்த 827 கிமீ திட்டங்களை விரைவுபடுத்தும் ரயில்வே

ராஜஸ்தானில் எல்லைத் தொடர்பை மேம்படுத்த 827 கிமீ திட்டங்களை விரைவுபடுத்தும் ரயில்வே
Updated on
1 min read

புதுடெல்லி: ​நாட்​டின் கடைக்​கோடிப் பகு​தி​யில் உள்ள மக்​களும் ரயில் வசதி​களால் பயன்​பெறும் வகை​யில், பல்​வேறு பகு​தி​களை ரயில் நெட்​வொர்க்​குடன் இணைக்க இந்​திய ரயில்வே பணி​யாற்றி வரு​கிறது.

அந்த வகை​யில் ராஜஸ்​தானில் எல்​லைப் பகுதி இணைப்பை அதி​கரிப்​ப​தற்​காக, ரயில்வே அமைச்​சகம் மொத்​தம் 827 கி.மீ. நீளம் கொண்ட 3 முக்​கிய​மான ரயில் பாதை திட்​டங்​களை விரைவுபடுத்தி உள்​ளது. இந்த ரயில் திட்​டங்​கள் நிறைவடைந்​தவுடன், அவை பிராந்​திய இணைப்பை மேம்​படுத்​தி, உள்​ளூர் மக்​களுக்​குப் பயனளிப்​ப​தோடு பொருளா​தார வளர்ச்​சி​யை​யும் ஊக்​குவிக்​கும். இந்​தப் பகு​தி​கள் வடமேற்கு ரயில்வே மண்​டலத்​தின் நிர்​வாகக் கட்​டுப்​பாட்​டின் கீழ் வரு​கின்​றன.

இதுகுறித்து வடமேற்கு ரயில்​வே​யின் தலைமை மக்​கள் தொடர்பு அதி​காரி அமித் சுதர்​சன் கூறும்​போது, ‘‘ராஜஸ்​தானின் எல்​லைப் பகு​தி​களில் ரயில் கட்​டமைப்பை வலுப்​படுத்த முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. மேலும், மேற்கு ராஜஸ்​தானில் பயணி​கள் வசதி​களை மேம்​படுத்த, அமிர்த பாரத் ரயில் நிலை​யத் திட்​டத்​தின் (ஏபிஎஸ்​எஸ்) கீழ் ஜெய்​சால்​மர் மற்​றும் பார்​மர் ஆகிய இரண்டு ரயில் நிலை​யங்​கள் மறுசீரமைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்​றார்.

அனுப்​கர் மற்​றும் பிகானேரை இணைக்​கும் 187 கி.மீ. நீள​முள்ள புதிய ரயில் பாதைக்​கான விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ள​தாக வடமேற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது. தற்​போது, இத்​திட்​டம் ஒப்​புதல் பெறும் இறு​திக்​கட்​டத்​தில் உள்​ளது. இதுத​விர, 380 கி.மீ. நீள​முள்ள ஜெய்​சால்​மர் – பாபர்​/பிலாடி (பார்​மர் வழி​யாக) மற்​றும் 260 கி.மீ. நீள​முள்ள கஜு​வாலா – ஜெய்​சால்​மர் ஆகிய 2 புதிய ரயில் பாதைகளுக்​கான இறுதி இருப்​பிட ஆய்வு நடை​பெற்று வரு​கிறது.

ராஜஸ்​தான் மாநிலத்​துக்​கு, 2026-27 நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆதர​வாக ரயில்வே அமைச்​சகம் ரூ.10,228 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. கூடு​தலாக, ரயில் பாதை விரி​வாக்​கம், நிலைய மறுசீரமைப்பு மற்​றும் பாது​காப்பு தொடர்​பான உள்​கட்​டமைப்​பு​களை உள்​ளடக்​கிய சுமார் ரூ.90,659 கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த மாதம், ராஜஸ்​தான் மற்​றும் ஹரி​யானா இடையே புதிய ரயில் பாதைக்​கான இறுதி இருப்​பிட ஆய்​வுக்கு ரயில்வே துறை ஒப்​புதல் அளித்​தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் எல்லைத் தொடர்பை மேம்படுத்த 827 கிமீ திட்டங்களை விரைவுபடுத்தும் ரயில்வே
நொய்டாவில் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in