மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சி நிகழ்வில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார்

விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

Updated on
1 min read

சென்னை: ​மாமல்​லபுரத்​தில் காங்​கிரஸ் கட்சி நிகழ்​வில் பங்​கேற்க ராகுல்​காந்தி இன்று சென்னை வரு​கிறார். இதையொட்​டி, விமான நிலை​யத்​தில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

சென்னை அடுத்த மாமல்​லபுரத்​தில் இன்று நடை​பெறவுள்ள தமிழக காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் பயிற்சி முகாம் நிறைவு விழா​வில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்​காந்தி பங்​கேற்​கிறார். அதற்​காக, டெல்​லி​யில் இருந்து இன்று காலை காலை 7.15 மணிக்கு இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானத்​தில் புறப்​படும் ராகுல் காந்​தி, காலை 10 மணிக்கு சென்னை விமான நிலை​யம் வரு​கிறார். அவருக்கு காங்​கிரஸ் கட்சி சார்​பில், வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது.

இதையடுத்​து, சென்னை விமான நிலை​யத்​தில் இருந்து காரில் புறப்​படும் ராகுல்​காந்​தி, இசிஆர் சாலை வழி​யாக மாமல்​லபுரம் செல்​கிறார். அங்கு நடக்​கும் காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் பயிற்சி முகாம் நிறைவு நாள் விழா​வில் உரை​யாற்​றுகிறார். விழா முடிந்​ததும், மாமல்​லபுரத்​தில் இருந்து காரில் புறப்​பட்டு மாலை 6 மணிக்கு சென்னை உள்​நாட்டு விமான நிலை​யம் வரு​கிறார். இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

முன்​ன​தாக நேற்று ராகுல்​காந்தி வரு​வதையொட்​டி, சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆலோ​சனைக் கூட்​டம் நடந்​தது. டெல்​லி​யில் இருந்து வந்​திருந்த சிஆர்​பிஎப் அதி​காரி​கள், தமிழக போலீ​சார், மத்​திய தொழில் பாது​காப்பு படை அதி​காரி​கள், முக்​கிய பிர​முகர்​கள் பாது​காப்பு அதி​காரி​கள், விமான நிலைய உயர் அதி​காரி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

ராகுல் காந்தி வரும் போது, சென்னை விமான நிலை​யத்​துக்​ குள், அவரை வரவேற்க எத்​தனை நபர்​களுக்கு அனு​மதி பாஸ் வழங்​கு​வது, சால்​வை, பூங்​கொத்து கொடுப்​ப​தில் பாது​காப்பு விதி​கள் மீறப்​ப​டா​மல் இருப்​பது, பயணி​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மல் பார்த்து கொள்​வது போன்​றவை​கள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “ராகுல் காந்​தி​யின் இந்த பயணம் முழு​வதும் காங்​கிரஸ் கட்சி சம்​பந்​தப்​பட்​டது. கட்​சி​யின் எதிர்​கால வளர்ச்சி திட்​டம்,கட்​சியை பலப்​படுத்​து​வது போன்​றவை​களை குறித்த ஆலோ​சனை கூட்​டம் ஆகும். ராகுல்​ காந்​தி​யின்​ பயணத்​திட்​டத்​தில்​, வேறு எந்​த நிகழ்ச்​சிகளும்​ இடம்​பெற​வில்​லை” என்​றார்​.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி</p></div>
குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதல்வர் பதக்கங்கள்: 72 பேருக்கு முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in