ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவிப்பு
ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வருகை
Updated on
1 min read

சென்னை: ​தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சியை அடிமட்ட அளவில் வலுப்​படுத்த அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை பல்​வேறு தீவிர நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அண்​மையில் மாநிலத் தலை​வ​ராக இருந்த செல்​வப்​பெருந்​தகைக்கு பதிலாக மாணிக்​கம்தாகூர் புதிய தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். மேலும், கட்​சி​யின் உட்​கட்​டமைப்பை சீரமைக்​கும் வகை​யில் புதிய மாவட்​டத் தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டு, அவர்​களுக்​கு பயிற்​சிகளும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தில் இளைஞர்​களை பெரு​மள​வில் காங்​கிரஸில் சேர்க்க​வும், தொண்​டர்​களிடையே அரசி​யல் விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் அகில இந்​திய தலை​வர்​கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தமிழகத்​திற்கு வருகை தந்து பல்​வேறு பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் கட்சி நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கத் திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. அதன் ஒருபகு​தி​யாக வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வரவுள்​ளார்.

இதுகுறித்து தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அகில இந்திய காங்​கிரஸ் கமிட்டியின் பொதுச்​செய​லாளர் கே.சி. வேணுகோ​பால் அறி​வித்​த​படி, ஆக. 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வரு​கிறார்.

இந்​திய அரசி​யலமைப்​பைப் பாது​காக்​க​வும், ஜனநாயகத்தை வலுப்​படுத்​த​வும், சமூக நீதியை நிலை​நாட்​ட​வும், இளைஞர்​களின் எதிர்​காலத்தை உறுதி செய்​ய​வும் அவர் தொடர்ந்து போராடி வரு​கிறார்.

அவரது இந்த வருகை காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கு மிகப்​பெரிய புதிய எழுச்​சி​யை​யும் உத்​வேகத்​தை​யும் தரும். 2029-ம் ஆண்டு நடை​பெறவுள்ள நாடாளு​மன்​றத் தேர்​தலில் ராகுல் காந்​தியை இந்​தி​யா​வின் பிரதம​ராக்​கும் இலக்கை நோக்​கித் தமிழக காங்​கிரஸின் பயணம் மேலும் வலுப்​பெறும்” எனத் தெரி​வித்​துள்​ளார். ராகுல் காந்​தி​யின் தமிழகம் வருகை அக்​கட்சி கட்​சித் தொண்​டர்​களிடையே பெருத்த எதிர்​பார்ப்​பை​​ ஏற்​படு​த்​தி​யுள்​ளது.

ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வருகை
பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in