விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்து வெளியேறிய ஒற்றர்கள்: எஸ்.ரகுபதி கருத்து

விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்து வெளியேறிய ஒற்றர்கள்: எஸ்.ரகுபதி கருத்து
Updated on: 
1 min read

புதுக்கோட்டை: விராலிமலை திமுகவில் இருந்த ஒற்றர்கள் வெளியேறிவிட்டதால், இனி நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்த ஒற்றர்களை வைத்துதான் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். திமுகவுக்குள் இருந்து கொண்டு உள்ளடி வேலை பார்த்து வந்த அந்த ஒற்றர்கள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், இனி விராலிமலை தொகுதியில் திமுகதான் வெற்றி பெறும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு தோல்வி கண்டுவிட்டது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை மடைமாற்றம் செய்வதற்காக, திமுகவினர் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை தவெகவினர் சுமத்தி வருகின்றனர். அவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் மூலம் தகர்த்து எறிவோம். திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சிறைத்துறை, தற்போது சீரழிந்துவிட்டது. இது ஒன்றே 5 மாத தவெக ஆட்சிக்கு சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்து வெளியேறிய ஒற்றர்கள்: எஸ்.ரகுபதி கருத்து
“கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஹிட்லர் போலவே முதல்வர் விஜய் செயல்படுகிறார்” - கே.பி.முனுசாமி

X