மே 4-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்: இரா.முத்தரசன் கருத்து

மே 4-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்: இரா.முத்தரசன் கருத்து
Updated on
1 min read

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: 5 மாநிலங்​களில் தேர்​தல்​கள் நடக்​கும் வரை அமை​தி​யாக இருந்த மத்​திய அரசு, தற்​போது வணிக காஸ் சிலிண்​டர்​களின் விலையை பன்​மடங்கு உயர்த்​தி​யுள்​ளது.

இதன் காரணமாக உணவு விடு​தி​கள், ஹோட்​டல்​கள், டீக்​கடைகள் என அனைத்​தி​லும் உணவு பொருட்​களின் விலை பன்​மடங்கு உயரும். மே 4-ம் தேதிக்கு பிறகு, பெட்​ரோல், டீசல் விலையை உயர்த்​தி​னாலும் ஆச்​சரியப்​படு​வதற்கு இல்​லை.

எனவே மத்​திய அரசு, வணிக சிலிண்​டர்​களுக்​கான விலை உயர்வை திரும்​பப்​பெற வேண்​டும். இவ்​வாறு இரா.​முத்​தரசன் கூறி​னார்.

மே 4-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்: இரா.முத்தரசன் கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக அமலாக்கத்துறையும் வழக்கு பதிய கட்டாயமில்லை: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in