தவெக வெற்றியை ‘ஜென் ஸி’ வாக்காளர்களின் எழுச்சியாக சுருக்கிவிட முடியாது: இரா.அர்ஜுனமூர்த்தி கருத்து

தவெக வெற்றியை ‘ஜென் ஸி’ வாக்காளர்களின் எழுச்சியாக சுருக்கிவிட முடியாது: இரா.அர்ஜுனமூர்த்தி கருத்து
Updated on
1 min read

சென்னை: தவெக​வின் வெற்​றியை `ஜென் ஸி' வாக்​காளர்​களின் எழுச்​சி​யாக சுருக்​கி​விட முடி​யாது என பாஜக தன்​னார்வ தொண்டு நிறுவன பிரி​வின் மாநில அமைப்​பாளர் இரா.அர்​ஜுனமூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘தமிழகத்​தில் வெறும் ஆட்சி மாற்​றமல்ல; இது சமூக மனப்​போக்​கின் மாற்​றம்’. இந்த வாக்​கி​யத்தை நான் தொடர்ந்து பதிவு செய்து வரு​வதற்கு காரணம் உண்​டு. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​களை பலரும் பல கோணங்​களில் ஆய்வு செய்​கிறார்​கள்.

சிலர் அரசி​யல் கணக்​கு​களை முன்​வைக்​கிறார்​கள். சிலர் அதிர்ச்​சி​யில் காரணங்​களைத் தேடு​கிறார்​கள். என் அரசி​யல் அனுபவம் இந்​தத் தேர்​தலை வேறொரு கோணத்​தில் பார்க்​கிறது. தமிழக வெற்​றிக் கழகத்​தின் வெற்​றியை வெறுமனே ‘ஜென் ஸி’ வாக்​காளர்​களின் எழுச்​சி​யாகச் சுருக்​கி​விட முடி​யாது.

அவர்​கள் மாற்​றத்​தின் குரலை உரக்க ஒலிக்​கச் செய்​திருக்​கலாம். ஆனால் அந்த மாற்​றத்தை வாக்​குப் பெட்​டி​யில் உறு​திப்​படுத்​தி​ய​வர்​கள் பெரும்​பாலும் நடுத்தர வயதினரும் குடும்​பப் பொறுப்​பைச் சுமக்​கும் நடுத்தர வர்க்​கத்​தினரும்​தான்.

பொது​வாக பொருளா​தார நெருக்​கடி​யில் வாழும் குடும்​பங்​கள், பணம், இலவசத் திட்​டங்​கள் அல்​லது உடனடி சலுகைகளை நோக்கி நகரும் என்ற அரசி​யல் கணிப்பு இம்​முறை உடைந்​தது.

“வீட்​டிலுள்ள இளைஞர்​களின் வற்​புறுத்​தலால் பெற்​றோர் வாக்​களித்​தார்​கள்” என்ற விளக்​க​மும் முழுமை​யாக ஏற்​கத் தக்​கதல்ல. 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மட்​டுமே கிடைக்​கும் ஜனநாயக உரிமை​யை, குடும்​பப் பொறுப்பை உணரும் வாக்​காளர்​கள் எளி​தில் பிறர் விருப்​பத்​துக்கு ஒப்​படைப்​ப​தில்​லை.

எனவே, இந்த வெற்​றி​யின் அடிப்​படை சாதி, மதம், இலவசம், பணம் ஆகிய​வற்​றைத் தாண்​டி, கடந்த கால அரசி​யல் அனுபவங்​களில் இருந்து தன்​னைத் தானே பாது​காத்​துக் கொள்ள தமிழ்ச் சமூகத்​தின் நடுத்தர வர்க்​கம் எடுத்த உறு​தி​யான முடி​வாக நான் பார்க்​கிறேன்.

இந்த வெற்​றி​யில் விஜ​ய்யும், விசிலும் நம்​பிக்​கை​யின் அடை​யாளங்​களாக இருந்​திருக்​கலாம். ஆனால் அந்த நம்​பிக்​கையை வெற்​றி​யாக மாற்​றியது சமூக மனநிலை​யின் மாற்​றம்​தான். இனி அந்த நம்​பிக்​கையை நிலைநிறுத்​து​வது செயல்​பாடே. அதற்​கான இறு​தித்தீர்ப்பை வழங்​கு​வது காலம்​ மட்​டுமே. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

தவெக வெற்றியை ‘ஜென் ஸி’ வாக்காளர்களின் எழுச்சியாக சுருக்கிவிட முடியாது: இரா.அர்ஜுனமூர்த்தி கருத்து
“மேகேதாட்டு அணை தடுப்போம் - காவிரி காப்போம்” - லோகோ வெளியிட்டார் அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in