“மேகேதாட்டு அணை தடுப்போம் - காவிரி காப்போம்” - லோகோ வெளியிட்டார் அன்புமணி

“மேகேதாட்டு அணை தடுப்போம் - காவிரி காப்போம்” - லோகோ வெளியிட்டார் அன்புமணி
Updated on
1 min read

சென்னை: காவிரி​யின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்​தில் அணை கட்ட கர்​நாடக அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. இதற்கு தமிழகத்​தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்​ளது.

மேகே​தாட்​டு​வில் அணையை ஏன் கட்​டக்​கூ​டாது என்ற காரணங்​களை குறிப்​பிட்​டு, பாமக தலை​வர் அன்​புமணி சமீபத்​தில் சமூக வலை​தளங்​களில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டிருந்​தார்.

அந்த வீடியோ​வில், “மேகே​தாட்டு என்ற இடத்​தின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிவிட்​டால், ஒரு சொட்டு தண்​ணீர் கூட தமிழகத்​துக்கு கிடைக்​காத சூழல் ஏற்​படும்.

மேகே​தாட்டு அணை விவ​காரம் என்​பது யாரோ ஒரு விவ​சா​யிகளு​டைய பிரச்​சினை என்று ஒதுங்கி நிற்​காமல், அனை​வருடைய பங்​களிப்​பும் மிக அவசி​யம்.

தமிழக இளைஞர்​கள் நினைத்​தால் காவிரி நதிநீரின் அவசி​யம் குறித்​தும், மேகே​தாட்​டு​வில் அணை கட்​டி​னால் ஏற்​படும் மோச​மான விளைவு​கள் குறித்​தும் அனை​வருக்​கும் தெரியப்​படுத்​தி, ஒரு மிகப்​பெரிய விழிப்​புணர்வை உரு​வாக்​கலாம்.

மேகே​தாட்டு அணையை தடுப்​போம் - காவிரியை காப்​போம்” என்று தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், இதற்கான லோகோ ஒன்றை சமூக வலை​தளங்​களில்​ அன்​புமணி நேற்று வெளி​யிட்​டார்​.

“மேகேதாட்டு அணை தடுப்போம் - காவிரி காப்போம்” - லோகோ வெளியிட்டார் அன்புமணி
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in