புதிய தமிழகம் கட்சியின் பயணம்... 7-ம் தேதி மாநாட்டில் விடை தெரியும்: புதிர் போடும் கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், எங்கள் கட்சி எதை நோக்கி பயணிக்கும் என்பதற்கான விடை தெரியவரும் என்று கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது: எங்கள் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரை பைபாஸ் சாலை அருகே ஜனவரி 7-ம் தேதி நடை பெற உள்ளது. மண் உரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகிய 3 குறிக்கோள்களை அனைத்து மக்களுக்கு பெற்றுதருவதை நோக்கமாக கொண்டு புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டது. இந்த லட்சியத்தை அடுத்தடுத்து கட்டத்துக்கு எடுத்து செல்லும் விதமாகவும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தும் முக்கிய தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம்.

இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாலற்றில் மிகப்பெரிய உந்து சக்தியாகவும், அரசியல் பொருளாதார சமூக வாழ்வை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் வகையிலும் இருக்கும். மாநாட்டுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் அழைக்கவில்லை. மாநாட்டில் நாங்கள் எந்த கூட்டணியில் இடம்பெறுவோம் என்று கூற வாய்ப்பு இல்லை. ஆனால், எங்கள் கட்சி எதை நோக்கி பயணிக்கும் என்பதற்கான விடை மாநாட்டில் தெரியவரும். தேர்தலில் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற அறைகூவல் இருக்கும்.

மாநாட்டுக்கு பிறகு, கூட்டணி பற்றி பேசுவோம். தென் மாவட்டங்களில் முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக புதிய தமிழகம் கட்சி உருவானது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அவசரப்படவில்லை. நாங்கள் எதார்த்தமாக இருக்கிறோம். தேர்தல் வரும்போது, சரியாக இருப்போம்.

ஓய்வூதிய திட்டம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு ஆகியவற்றை சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டிய அறிவிப்பாக பார்க்கிறேன்.ஓய்வூதிய திட்டம் குறித்து முழுமையாக படித்தபிறகு, கருத்துகூற முடியும். இது உண்மையில் அரசு பணியாளர்களுக்கு பயன் உள்ளதா, இதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நிதி உள்ளதா, தொடர்ந்து செய்யமுடியுமா என்று ஆய்வு செய்துதான் கூறமுடியும். இவ்வாறு அவர் கூறினர்.

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
விசிகவில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in