தவெக உடன் புதிய தமிழகம் கூட்டணியா? - கிருஷ்ணசாமி விளக்கம்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

Updated on
1 min read

மதுரை: “தவெகவுடன் கூட்டணி சேருமாறு அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பேசினார். அதிமுக, திமுக வலுவிழந்துவிட்டது. அதிமுக, திமுகவுக்கு சமமாக விஜய்யை பார்க்கிறேன்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. நிறைவேற்றிய வாக்குறுதிகளும் மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை. கிராமத்தை நோக்கி தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. திமுக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வியுற்று உள்ளது.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என தவெக தலைவர் விஜய் மட்டும் தான் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்து எப்படி வலுப்பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதே கருத்தில் விஜய் உறுதியுடன் உள்ளாரா? அவரை நோக்கி யாரெல்லாம் செல்கிறார்கள், அவரது அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

விஜய் கட்சியில் இருந்து முக்கியமானவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். எங்களை யார் வெற்றி பெற வைப்பார்களோ அவர்களிடம் கூட்டணி சேர்வதுதான் எங்களுடைய அணுகுமுறை.

அதிமுகவும் எங்களுடன் பேசி வருகிறது. ஜன.7 வரை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை எனக் கூறிவிட்டோம். எங்களின் அடுத்தக்கட்ட நகர்வு இனிமேல்தான் தொடங்கும்.

அதிமுக - திமுக ரெண்டு பேரையுமே பார்த்து விட்டோம். காசு பணம் இல்லாத தேர்தலாக நடக்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக தேர்தல் தேதி அறிவித்தால் நல்லது. அதிமுக - திமுகவுக்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன். திமுக , அதிமுக ஏற்கெனவே வலு இழந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி</p></div>
‘ஜனநாயகன்’ தணிக்கை சர்ச்சை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in