‘ஜனநாயகன்’ தணிக்கை சர்ச்சை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டும் மாறியுள்ளது என ‘ஜனநாயகன்’ படம் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமுக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு கடுமையான கண்டனங்கள்!” என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரைத் துறையில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ‘பராசக்தி’ படத்துக்கு பல ‘வெட்டு’களுக்குப் பிறகு தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் அந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி (நாளை) வெளியாகிறது. தணிக்கை குழு தெரிவித்த மாற்றங்கள் மற்றும் பரிந்துரையை ‘பராசக்தி’ படக்குழு மாற்றியுள்ளது.

ஜனநாயகன் சிக்கல்? - ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து தணிக்கை சான்று வழங்கக் கோரி, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும்.

ஏற்கெனவே படத்தை பார்த்து, தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தனிநீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில், மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் எல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 20-க்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகிறது.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின்</p></div>
திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in