திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 4,500 லிட்டர் நெய்.

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 4,500 லிட்டர் நெய்.

Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீபத் திரு​விழா வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. தொடர்ந்து நடை​பெறும் 10 நாட்​கள் விழா​வின் முக்​கிய நிகழ்​வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதி​காலை ஏற்​றப்​படு​கிறது.

அன்று மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்​புறம் 2,668 அடி உயர​முள்ள தீபமலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படும். மகா தீபம் ஏற்​று​வதற்​காக 1,500 மீட்​டர் காடாதுணி, 4,500 கிலோ நெய் பயன்​படுத்​தப்​படும்.

இந்த மகா தீபம் 11 நாட்​கள் பக்​தர்​களுக்கு காட்சி அளிக்கும். இந்​நிலை​யில், மகா தீபம் ஏற்​று​வதற்​காக கோயில் நிர்​வாகம் சார்​பில் ஆவின் நிறு​வனத்​திலிருந்து 4,500 கிலோ நெய் கொள்​முதல் செய்​யப்​பட்டு நேற்று கோயிலுக்கு கொண்டு வரப்​பட்​டது.

தீபத் திரு​விழா கொடியேற்​றத்​துக்கு முன்​பாக ஊர்​காவல் தெய்​வ​மான துர்க்​கை​யம்​மன் உற்​சவம், பிடாரி அம்​மன் மற்​றும் விநாயகர் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இன்று இரவு துர்​க்கை​யம்​மன் உற்​சவம், நாளை இரவு பிடாரி அம்​மன் உற்​சவம் நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 4,500 லிட்டர் நெய்.</p></div>
திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in