திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது
Updated on
1 min read

மதுரை: உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆய்வு செய்து கொண்​டிருந்​த​போது, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ட்ரோன் கேம​ராவை பறக்​க​விட்ட இளைஞர் கைது செய்​யப்ப்​டார்.

மதுரை திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபத்தை ஏற்​று​வது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.​சுவாமி​நாதன் நேற்று முன்​தினம் மலை உச்​சியில் ஆய்வு செய்​தார்.

நீதிபதி ஆய்வு செய்து கொண்​டிருந்​த​போது, திடீரென அப்​பகு​தி​யில் ட்ரோன் கேமரா பறந்​தது. அனு​ம​தி​யின்றி ட்ரோன் பறக்​க ​விட்​டது தொடர்​பாக திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தினர்.

விசாரணையில், பழங்​கா நத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த யூடியூபர் மணி (25) என்​பவர் ட்ரோன் கேம​ராவைப் பறக்​க​விட்​டு, காட்​சிகளை பதிவு செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரைக் கைது செய்த போலீ​ஸார், ட்ரோன் கேம​ராவைப் பறி​முதல் செய்​தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,367 கனஅடியாக அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in