ஒரு மீனின் விலை ரூ.27 ஆயிரம்

ரூ. 27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்.

ரூ. 27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்.

Updated on
1 min read

புதுச்சேரி: ஆந்​திரம் மற்​றும் தெலங்​கானா மக்​களிடையே மிகுந்த வரவேற்பை பெற்​றது புலசா மீன். இந்த ஒரு மீனின் விலை ரூ.27 ஆயிரத்துக்கு விலை போனது.

‘மீன்​களின் ராஜா’ என்று அழைக்​கப்​படும் இந்த மீன், தனிச்​சுவை உடையது. மருத்​துவ குணம் உடையது. மூளை வளர்ச்​சி, நோய் எதிர்ப்​புக்கு சிறந்​தது என்று நம்​பப்​படு​கிறது. இந்த மீன் பிடிபடும் போதெல்​லாம் அதிக விலைக்கு விற்​கப்​படும்.

புதுச்​சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்​தி​யத்​தில் உள்ள கோதாவரி ஆற்​றில் கிடைத்த 1,300 கிராம் எடையி​லான ஒரு புலசா மீன் நேற்று ரூ.27 ஆயிரத்​துக்கு விலை போனது. ஏனாம் மீன் அங்​காடி​யில் நடந்த ஏலத்​தில் ரூ.26 ஆயிரத்​துக்கு காக்​கி​நாடா கோட்​டிபள்​ளியைச் சேர்ந்த மீனவர் மல்​லாடி சத்​ய​நா​ராயணா ஏலம் எடுத்​தார்.

இதை ஆயிரம் ரூபாய் லாபமாக வைத்து ரூ. 27 ஆயிரத்​துக்கு அடுத்த சில நிமிடங்​களில் விற்​றார். கடந்த 10 நாட்​களில் கோதாவரி​யில் சுமார் 7 புலசா மீன்​கள் கிடைத்​தன. அவை ரூ.14 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை போனது. நேற்று கிடைத்த மீன் ரூ.27 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுவே இந்த ஆண்​டின் அதி​கபட்ச விலை என விற்​பனை​யாளர்​கள் தரப்​பில் குறிப்​பிட்​டனர்​.

<div class="paragraphs"><p>ரூ. 27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்.</p></div>
“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in