மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் 17-ல் பதவியேற்பு?

ராஜவேலு, சிவக்கொழுந்து. ஜிஎன்எஸ்.ராஜசேகரன்.

ராஜவேலு, சிவக்கொழுந்து. ஜிஎன்எஸ்.ராஜசேகரன்.

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி அமைச்​சர​வை​யில், மேலும் 3 புதிய அமைச்​சர்​களுக்கு மத்​திய அரசு அனு​மதி‌ அளித்து உள்​ளது. வரு​கிற 17-ம் தேதி பதவி​யேற்பு விழா நடக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​று, மீண்​டும் ஆட்​சியை பிடித்​தது. கடந்த மே 13-ம்​தேதி முதல்​வ​ராக ரங்​க​சாமி பதவி​யேற்​றார். இதைத் தொடர்ந்து அமைச்​சர்​களாக பாஜக நமச்​சி​வா​யம், என்​.ஆர்​.​காங்​கிரஸ் மல்​லாடி கிருஷ்ணா​ராவ் ஆகியோர் பதவி​யேற்​றனர். மீத​முள்ள 3 அமைச்​சர்​கள் பதவி​கள் குறித்து கடந்த 3-ம் தேதி துணை நிலை ஆளுநர் கைலாஷ்​நாதனை சந்​தித்த முதல்​வர் ரங்​க​சாமி, பட்​டியலை வழங்​கி​னார்.

இதில் ஜி.என்.​எஸ்.ராஜசேகரன் (பாஜக), ராஜவேலு, சிவ​கொழுந்து (என்​ஆர்​.​ காங்கிரஸ்) ஆகியோரை அமைச்​சராக்க பரிந்துரைத்திருந்தார். யூனியன் பிரதேச விதி​முறைப்படி, அந்​தக் கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைத்​தார். இதற்கு அனு​மதி கிடைத்​தவுடன் கடந்த 7-ம் தேதி பதவி​யேற்பு விழா நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் அனு​மதி| கிடைக்​காத​தால் விழா நடைபெறவில்லை.

இந்த நிலை​யில் புதிய அமைச்​சர்​களாக ராஜவேலு, ராஜசேகரன், சிவக்​கொழுந்து ஆகியோரை நியமிக்க குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு தற்​போது அனு​மதி அளித்​துள்​ளார். இதையடுத்து வரு​கிற 17-ம் தேதி 3 புதிய அமைச்​சர்​களும் பதவி​யேற்​பார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>ராஜவேலு, சிவக்கொழுந்து. ஜிஎன்எஸ்.ராஜசேகரன்.</p></div>
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” - முதல்வர் விஜய் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in